கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மணிமேகலை திருஞானசம்பந்தம் ஆசிரியை நினைவு சேவை மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் ஒன்றிய கவுன்சிலர் ஆவின் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும் சேவை மைய அறக்கட்டளை நிறுவனர் சிவன் சிறப்புரை ஆற்றி ப்ரொஜெக்டர் மூலம் மாணவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு குறித்து விளக்கினார் மேலும் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு அறிவிப்பு பலகை வழங்கப்பட்டது பள்ளியின் எஸ் எம் சி தலைவி நந்தினி தேவி வரவேற்றார் இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் மேலும் இதில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment