கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலகப்பிரசித்திப் பெற்ற பூவராகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டு சித்திரைப் பௌர்ணமியை முன்னிட்டுதெப்ப உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக மாலையில் மட்டையடி உற்சவம், தீர்த்தவாரி, திருமஞ்சனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஆரம்பித்த தெப்ப உற்சவம் அதிகாலை வரை நடைபெற்றது. முன்னதாக உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத யக்ஞவராகன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினார்.
குளத்தின் மையத்தில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. சிறப்பு வாய்ந்த தெப்ப உற்சவத்தைக் காண பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளக்கரை படிக்கட்டுகளில் அமர்ந்து தீபம் ஏற்றி சாமி தரிசனமும் செய்தனர்.
No comments:
Post a Comment