கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் ஆவட்டி ஜே எஸ் ஏ வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர் இந்நிலையில் இதில் ஒரு பகுதியாக மாணவர்கள் நடத்திய கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி கீரப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் லட்சுமணன் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி சுந்தர வடிவு திட்ட பொறுப்பாளர் வேல் பிரபாகரன் சந்தோஷ் குமார் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பிருந்தா தேவி ஆகியோரின் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த மதிப்பீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் பங்கேற்றார் இதில் கல்லூரி மாணவர்கள் கிராம வரைபடம் பயிரட்டவணை மக்கள் தொகை நிலப்பரப்பு உள்ளிட்ட வரைபடம் வரைந்து அதனை பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு விளக்கி கூறினர், இந்த நிகழ்ச்சியை கல்லூரி மாணவர்கள் குழுவினர் 202007 ஒருங்கிணைத்து நடத்தினர்.
No comments:
Post a Comment