அதிமுக கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, வடலூர் நகராட்சியில், வடலூர் நகர அதிமுக சார்பில், வடலூர் - பண்ருட்டி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில், கோடைகால நீர் மோர் பந்தலை, கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர். ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்களின் உடல் உஷ்ணத்தை போக்கும் வகையில், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கினார். நிகழ்வில் வடலூர் அதிமுக நகர செயலாளர் சி.எஸ்.பாபு உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment