கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள கள்ளிக்காட்டு தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலை கழகம் மற்றும் தியாகி பாலா பேரவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சதீசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிட விடுதலைக் கழகம் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக தியாகி பாலா பேரவை தலைவர் அருள்வேந்தன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் புவனை சௌகத் அலி ஆர் வி பி மருத்துவமனை மருத்துவர் கதிரவன் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் தியாகி பாலா பேரவை பொதுச் செயலாளர் காரல் மார்க்சு இளைஞர் காங்கிரஸ் சிலம்பரசன் தியாகி பாலா பேரவை அமைப்புச் செயலாளர் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை நோட் பேனா ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.
மேலும் இதில் திராவிட விடுதலைக் கழக புவனகிரி ஒன்றிய பொறுப்பாளர் இளையராஜா அம்பேத்கர் மன்றம் திலீபன் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் தலைமை ஆசிரியர் மைதிலி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment