கருங்குழியில் ஸ்ரீ சாந்த காளியம்மன் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 April 2024

கருங்குழியில் ஸ்ரீ சாந்த காளியம்மன் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த காளியம்மன் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன், நவக்கிரகம் உள்ளிட்ட ஆலயத்தில், மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதன் தொடக்கமாக ஏப்21ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 30 மணி அளவில் விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, அங்கு ரார்ப்னம், கடஸ்தாபனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 7 மணி முதல் கால யாக பூஜை ஆரம்பம், பாலிகை பூஜை, துவாரக பூஜை, வேதிகா பூஜை, வேதபாராயணம்,மந்தர புஷ்பம் நடைபெற்றது, இரவு 9 மணி அளவில் மகா பூரணாக குதி, தீபாரதனையும், பிரசாதம் வழங்குதல்,தொடர்ந்து சாமிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. 


மறுநாள் (நேற்று) திங்கட்கிழமை கும்பா அபஷேகத்தன்று காலை 6 மணிக்கு மங்கள வாத்தியமும், இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், தொடர்ந்து கோ பூஜை, தன பூஜை, கன்னிகா பூஜை, வடுகு பூஜை, நாடிசந்தானம், தத்துவா அர்ச்சனை, சதுர்வேத பாராயணம், ஸ்பரிசாஹிதி, வசோதராஹோமம், நவக்கிரக ஹோமம், யாத்திரா தானம்,  விளையாட்டுமந்திர புஷ்பம் நடைபெற்றது.


காலை 9 மணிக்கு, பூர்ணாஹிதி தீபாரதனையும், காலை9. 30க்கு கடம் புறப்பாடும், காலை 9:45 விமானம், மகா கும்பாபிஷேகமும், காலை 10 மணி மூலவர் மகாஅபிஷேகம் தீபாரதனையும்,காலை 10:15 அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது, கும்பா அபஷேகத்தில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கும்பா அபஷேகத்தை கண்டு களித்தனர், அன்று மாலை ஆறு மணிசாந்த காளி அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. மறுநாள் ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்கிழமை,மாலை 6 மணி முதல்நாள் மண்டல பூஜை ஆரம்பம், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருங்குழி கிராம மக்கள் செய்து இருந்தனர். 

No comments:

Post a Comment

*/