ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடிகிராமத்தில் ஸ்ரீ செல்வ கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 April 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடிகிராமத்தில் ஸ்ரீ செல்வ கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி  கிராமத்தில் ஸ்ரீ  செல்வ கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சனிக்கிழமை காலை கணபதி ஹோமம், தனலட்சுமி ஹோமம் நவகிரகசாந்தி, பூர்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இரண்டாம் கால யாகசாலை பூஜையில் அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்ஸங்கிரஹணம், புற்று மண் எடுத்தல், ரக்ஷாபந்தனம், உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்றபின் இன்று திங்கள் காலை  யாகசாலையின் மகா பூர்ணாஹூதி முடிவுற்றது. பின்னர் அங்கே வைக்கப்பட்டிருந்த புனித நீர் கலசங்கள் கடம் புறப்பாடு மூலம் ஊர்வலமாக  கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் மகா மந்திரங்கள் முழங்க ஸ்ரீ செல்வகணபதி கோவிலின் கோபுரத்தின் மீது உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


இந்த கும்பாபிஷேக விழாவைக் காண நகரப்பாடி கிராம மக்கள் மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களும் கும்பாபிஷேக காட்சியை தரிசனம் செய்து சுவாமியை வணங்கி அருளாசி பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment