நெய்வேலியில் அகில இந்திய சிறுபான்மை முஸ்லிம் பணியாளர்கள் நல சங்கம் சார்பில் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

நெய்வேலியில் அகில இந்திய சிறுபான்மை முஸ்லிம் பணியாளர்கள் நல சங்கம் சார்பில் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அகில இந்திய சிறுபான்மை முஸ்லிம் பணியாளர்கள் நல சங்கம் சார்பில் உயர்வுக்கு உயிர் உயர்கல்வி என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19ல்  நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக பண்ருட்டி இஸ்லாமிக் பைத்தது மால் டிரஸ்ட் நிறுவனர் ஜாகிர் உசேன், சிறப்பு வழிகாட்டல் வல்லுனர்கள் சித்திக் மற்றும் சலா ஹதீன் ஆகியோர் கலந்து கொண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம், கல்லூரியில் சேரும் பொழுது எந்த துறையை தேர்வு செய்யலாம், வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் படிப்புகள் மற்றும் அதற்கான உதவித்தொகைகள், குறைந்த செலவில் நல்ல பாடத்திட்டங்களை எப்படி தேர்வு செய்வது மற்றும் உளவியல் ஆலோசனை ஆகியவற்றை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.


நிகழ்ச்சியில் சுமார் 200க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அல்லாது அனைத்து சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டடு பயனடைந்தனர்.            


- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி 

No comments:

Post a Comment