கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கடந்த 15 ஆம் தேதி துவங்கியது. இதன் பின்னர் விழாவில் தினமும் காலையில் சுவாமி புறப்பாடும் இரவில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், தங்க கருடசேவை, சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகன மூலம் வீதி உலாவும், நடைபெற்று வந்தது. விழாவின் நிகழ்ச்சியான சித்திரைத் தேர் திருவிழா நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர் தேரானது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என நான்கு வீதிகளிலும் வலம் வந்து தேர் நிலைக்கு வந்தடையும் இதனைத் தொடர்ந்து வருகின்ற 23ஆம் தேதி மட்டையடி உற்சவம் நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது
Post Top Ad
Sunday, 21 April 2024
Home
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீபூவராக சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீபூவராக சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment