கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மேல்புதுஇளவரசன் பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கூத்து பெருமாள் ஆலயத்தில், ஜீர்னோத்தாரான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர பூஜை தன பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டது. பின்னர் இரண்டு கால பூஜை நடைபெற்ற, பூர்ணாகதி அடைந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார் வேதங்கள் முழங்க, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பொது மக்களுக்கு தீவாரதனை காண்பிக்கப்பட்டதுபொது மக்களுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகர்,முருகர், மகாலட்சுமி, சிவன் வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி
No comments:
Post a Comment