வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும், கடலூர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவக்கொழுந்திற்கு, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர். ராஜேந்திரன், வீதி வீதியாக நடந்து சென்று, முரசு சின்னத்திற்கு, வாக்களிக்க கோரி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக தேமுதிக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிகழ்வில் வடலூர் அதிமுக நகரக் செயலாளர் சி.எஸ்.பாபு உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment