மாடுகளை சாலை மார்க்கமாகவே மேய்ச்சலுக்கு கொண்டு செல்கின்றனர். மேய்ச்சல் காலங்களில் எவ்வித தீவணங்களும் இவர்கள் விலை கொடுத்து வாங்கி மாடுகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால் மாடுகள் அனைத்தும் இயற்கையாகவே நெல் அறுவடை மற்றும் உளுந்து அறுவடை வயல்களில் மேய்ச்சலில் விடும்போது தங்களுக்கான உணவினைத் தேடிக் கொள்கின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் நெல் மற்றும் உளுந்து அறுவடை முடிந்த பின் நிலத்தின் உரிமையாளர்கள் மாடு வைத்திருப்பவர்களுக்கு ஃபோன் செய்து அழைப்பின் பேரில் மாடுகளை ஓட்டிச் செல்கின்றனர்.
நான்கு மாதங்கள் அங்கேயே தங்கி வயல்களில் மேய்ச்சலுக்கு விட்டு, பின்னர் இரவுகளில் அதே வயல்களில் பட்டியில் அடைத்தும் மாடுகளை தங்க வைக்கின்றனர். இதனால் மாட்டின் சாணக்கழிவுகள் நிலத்திற்கு உரமாக மாறுகின்றன. இதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் ஒரு இரவுக்கு சுமார் 3,000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கட்டணமாக தருகின்றனர். மேலும் மாடுகளை சாலை வழியாக அழைத்து வரும்போது பல்வேறு இடர்பாடுகள் இருக்கிறது எனவும், விபத்துக்கள் ஏற்பட்டு மாடுகளுக்கு உயிரிழப்பு உருவாகிறது எனவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இருந்தாலும் பாரம்பரியமாக இந்தப் பணியை செய்வதால் எத்தனை இடர் வந்தாலும் அதையும் தாண்டி இதில் கிடைக்கும் வருமானத்தை நினைத்து ஆர்வத்தோடு மாடுகளை ஓட்டி செல்கின்றோம் என்கிறனர். முக்கியமாக மாடுகளின் கன்றுகளை ஜல்லிக்கட்டு மாடுகளுக்காக வாங்கி செல்கின்றனர். இதன் மூலமும் ஓரளவுக்கு நல்ல வருவாய் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment