வடலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 April 2024

வடலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.


கடலூர் மாவட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மணி வாசகம் அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது கொடுத்து உதவ வேண்டும்,இதனால் எந்த இழப்பும் ஏற்படுவதில்லை, வள்ளலார் இதனை ஒட்டி தான் வடலூர் சத்திய ஞான சபையும் சத்திய தருமச்சாலையும் உருவாக்கினார்கள், இதன் மூலம் அன்ன தானம், வழங்கப்படுகிறது.  

திருக்குறளையும் அவர் பெருமைகளையும் போற்றி பாராட்டியவர் வள்ளலார், அவரை தமிழகத்தில் தமிழ் சமூகத்தினர்கள் வணங்கி வந்தனர், ஆண்டுதோறும் ஜோதி தரிசனத்திற்கான லட்சக்கணக்கான  மக்கள் திரவது வழக்கம், அங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கூறி, பொதுவெளியில் கட்டிடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும், இவர்கள் தான் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தார்கள் அப்போதெல்லாம் இந்த வள்ளலார் பற்றி ஆய்வு செய்வது பற்றிநினைவு வரவில்லையா? அப்போது ஆய்வுகள்செய்ய கட்டிடம் கட்டுவோம் என செய்யவில்லையே?, இப்போது இங்கு கட்டிடம் கட்டுவதால் வழிபாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தும், இதனை வேறு இடத்தில் கட்டலாம் இங்கு கட்டக்கூடாது, இதை இங்கு கட்டினால் எதிர்காலத்தில் அது இடித்து தள்ள வேண்டிய சூழல் உருவாகும், தொடர்ந்து இவர்களே ஆட்சியில் இருப்பார்கள் என்பது நிச்சயம் அல்ல, இதற்கான செலவுகள் தேவையில்லாதது,  இன்னும் இரண்டு நாள் தான் தேர்தல் பிரச்சாரம் இருக்கும், பிரச்சாரம் முடித்த பின்பு நாங்கள் இங்கு தான் (வருவோம்) இருப்போம் கட்டிடம் கட்ட விடமாட்டோம் மீறி கட்டினால் கட்டிடத்தை இடித்து தரமட்டமாக்குவோம், இந்த நிலையில் இவர்கள் உருவாக்க வேண்டாம் நமது குரல், பாராளுமன்றத்தில் ஒலிக்க நமது வேட்பாளர் மணிவாசகம் அவர்களுக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், என பேசினார், நிகழ்வில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் சீனுவாசன், சுமதி உட்பட பலர்  உடன் இருந்தனர்


செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி

No comments:

Post a Comment

*/