கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும் வாக்களிப்புக்கு பணம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும், மக்கள் சேவை இயக்கமும் நெய்வேலி குளுனி பள்ளியும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1000 மாணவிகள் பங்கு கொண்டு 100 சதவீதம் வாக்களிப்போம் வாக்களிப்பது நமது உரிமை என்று எழுத்து வடிவத்தில் நின்றும் அமர்ந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் தமது பெற்றோர், 18 வயது நிரம்பிய சகோதர சகோதரிகள் உறவினர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேற்படி நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா என்எல்சி போக்குவரத்து துறை துணை பொது மேலாளர் அறிவுமணி முதன்மை மேலாளர் அருளழகன் மக்கள் சேவை இயக்க செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிறைவாக குளினி பள்ளி முதல்வர் சகோதரி ரோஸ்லின் நன்றி தெரிவித்தார்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment