கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கு சொந்தமான ஸ்கூட்டி -யை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வடலூர் நகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போய் உள்ளது. இது குறித்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது, சிவப்பு கலர் சட்டை மற்றும் கட்டம் போட்ட லுங்கி அணிந்த நபர் ஸ்கூட்டியை எடுத்து செல்வது தெரிய வந்தது. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் கடந்த மூன்று நாட்களாக வைரலாகிய நிலையில், இன்று வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தில், அன்னதானம் போடப்பட்ட இடத்தில், ஸ்கூட்டி திருடிய திருடன் அணிந்த அதே உடையில், ஒருவர் சாப்பாடு வாங்க நின்றது அறிந்த பார்வதிபுரம் மக்கள் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான் ஸ்கூட்டி திருடியதை ஒத்துக் கொண்டதாகவும், திருடப்பட்ட ஸ்கூட்டியை சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வைத்துள்ளதாகவும், அதற்கான டோக்கனையும் பொது மக்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து வடலூர் காவல்துறையிடம், பார்வதிபுரம் மக்கள் தகவல் தெரிவிக்கவே, வருகை தந்த காவல்துறையினரிடம் ஸ்கூட்டி திருடனை ஒப்படைத்தனர். இது குறித்து வடலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு, ஸ்கூட்டி திருடிய திருடன், திருடும்போது அணிந்த அதே உடையை, மீண்டும் அணிந்து கொண்டு, வடலூர் பகுதியில் சுற்றிதிரிந்ததால் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment