இதுகுறித்து செய்தியாளர் தனுஷ் கூறுகையில் "நான் இது குறித்து காவல் ஆய்வாளர் ராஜராஜன் அவர்களிடம் தெரிவித்த பொழுது, அவர் தனது ஓட்டுனரிடம் கேட்ட பொழுது சார் அவர் தான் நான் வண்டியை இப்படித்தான் விடுவேன் உங்களால் என்ன பண்ண முடியும்? என்று கேட்டடார், அதனால தான் நான் இப்படி சொன்னேன்", என்ற பெய்யான பதிலை தெரிவித்ததின் பெயரில் காவல் ஆய்வாளர் அவர்கள் "நீங்க போலீஸ் சொன்னா கேக்க மாட்டீங்களா? பத்திரிகையாளராக செய்தி போடுவீங்க போட்டுக்குங்க, ரோஷம் இருக்குன்னா வண்டிய ஸ்டேஷன்ல விடாதீங்க" என கூறினார்.
பத்திரிகையாளர்களுக்கு காவல்துறையில் கொடுக்கப்படும் மதிப்பும் மரியாதையும் இது தான் என்பதற்கு இந்த ஒரு செயல்பாடு சாட்சியாக உள்ளது தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்து வரும் வடலூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கவியரசன் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வாரா கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்?
வடலூர் காவல் நிலையத்தில் மேற்கொண்ட காவல்துறையினர் அல்லாது காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினரின் உறவினர்கள் மற்றும் இதர பொதுமக்கள் பலர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment