வடலூரும், கடலூராகும் என்ற வள்ளலாரின் கூற்றுப்படி வடலூர் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்று மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 18 April 2024

வடலூரும், கடலூராகும் என்ற வள்ளலாரின் கூற்றுப்படி வடலூர் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்று மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு.


2024 மக்களவைத் தொகுதித் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் புதன்கிழமை மாலை 6 மணிக்குள்  பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

அந்த வகையில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது  கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர்.  பிரச்சாரத்தின்  இறுதி  நாளான  புதன்கிழமை  மாலை  கடலூர் மாவட்டம், வடலூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்துடன்,  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அங்கு கூடியிருந்தவர்களிடம் வாக்குக்கேட்டார். அப்போது, அவர் பேசியதாவது கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக இருக்க வேண்டும். 


தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவும், தேர்தல் அறிவிப்புக்கு பின்னரும் கடுமையாகப் பணியாற்றி 90 சதவீதம் கிணற்றை தாண்டியுள்ளோம். இதற்காக உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான், சூரியன், பானை, கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறேன். மூன்று தொகுதிகளில் வேலை செய்தால் இங்கு சரியாக வேலை செய்ய முடியவில்லை. சொல்லப்போனால் நான் இங்கு தம்பி விஷ்ணுபிரசாத் ஜெயிக்க வைக்க வேண்டும். தருமபுரியில் விஷ்ணு பிரசாத்தின் அக்கா  செவுமியா தோற்க வைக்க வேண்டும். 


இதுதான் எனக்கு தலைமையிடத்து உத்தரவு இதனால் கடுமையான போட்டிகள் நடுவே கடலூர் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

No comments:

Post a Comment