குறிஞ்சிப்பாடி தொகுதியில் எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் அரவணைப்பேன். - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேச்சு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 April 2024

குறிஞ்சிப்பாடி தொகுதியில் எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் அரவணைப்பேன். - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேச்சு.


தொண்டர்கள் அனைவரும் அடக்கமாக பணியாற்றி திமுக கூட்டணியில் போட்டியிடும் திமுக கூட்டணி கடலூர் நாடாளுமன்ற  வேட்பாளருக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேச்சு.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. தலைமையிலான இந்திய கூட்டனி கட்சிகளின் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் வடலூர் அருகே உள்ள ஆண்டிக்குப்பம் பைபாஸ் சாலையில்  நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் திமுக சார்பில் கூட்டணி கட்சி சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அவர்களை அறிமுகம் செய்து பேசுகையில், கூட்டத்தில் அமைச்சர் எம் ஆர்கே பேசியதாவது, நம்ம கூட்டணி பெரிய கூட்டணி இதை சமாளிப்பது பெரிய வேலை தான், தலைவர் பல்லாண்டுகளாக கூட்டணியை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார், ஜெயலலிதா தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி கட்சிகளை கழட்டி விடுவார், ஆனால் நம் கூட்டணி  பல்லாண்டு ஆக நீடிக்கிறது, கடந்த தேர்தலில் என்னோடு இருந்த நண்பரிடம் எப்படி தேர்தல் பணி ஆற்றுவது என்று ரகசியத்தை கூறினேன், ஆனால் அடுத்த சில நாளில் அவர் வேறு அணிக்கு சென்று விட்டார், நெருக்கடியான காலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் உதவியுடன் மிக குறைந்த ஓட்டில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன் , அந்தக் கட்சிக்கு நன்றி சொல்கிறேன், திருமாவளவனுக்கு என் வீட்டில் தான் சின்னம் பற்றிய ஆலோசிக்கப்பட்டது. 


அப்போது டேபிள்நாற்காலி, சின்னம் யோசிக்கப்பட்டது, அது வேண்டாம் எளிய சின்னமான மக்களுக்கு புரியும் சின்னமான பானை சின்னத்தை கூறினேன், அதை ஏற்கப்பட்டு வெற்றி சின்னமானது,நம் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதே நமது பணி ஆகும், வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகும், இந்த வெற்றிஅதிக ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம், உங்களுடைய கடுமையான தேர்தல் பணி தான், என்னுடைய உழைப்புக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்,கடலூர் தொகுதி கை சின்னத்திற்கும் சிதம்பரம் தொகுதி பானைசின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், நமது வேட்பாளர் இந்தி ஆங்கில மொழியில் திறமை உள்ளவர், டெல்லியிலும் நல்ல செல்வாக்கு உள்ளவர், தொழிற்சங்க வாதி, ஆவார் நம் ஒன்றிய நிர்வாகிகள் எளிமையாகவும் சிறப்பாக செயல்படுபவர்கள், நான் கடந்த தேர்தல் சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்பொழுது நம் கட்சியை சேர்ந்தவர்களும்,நம் கூட்டணி கட்சியினரும் சிறப்பாக பணிபுரிந்து என்னை வெற்றி பெற செய்தனர்.அதற்காக நன்றி சொல்லி கொள்கிறேன் நீங்கள் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறச் செய்ததால், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அமைச்சராகவும் உள்ளேன். நான் சண்டை போட்டாலும் கோபப்பட்டாலும், நாம் குடும்பமாக இருந்து செயல்படுகிறோம். 


இணக்கமாக கூட்டணியில் நல்ல உறவோடு இருக்கிறோம் இந்த தொகுதி எனக்கு புகுந்த வீடு முதன் முதலில் வரும் போது வெளியூர்க்காரர்கள். என்றனர் சிறப்பான பணியால் நான் தொகுதி செல்வாக்கு உள்ளவனாக, உள்ளேன், நீங்கள் அடக்கமாகவும் அமைதியாகவும் தேர்தல் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.


கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி, இள புகழேந்தி, தி க பொதுச் செயலாளர், துரை சந்திரசேகரன், எம் எல் ஏ ராதாக்கிருஷ்ணன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுதலைவர். திருமால்வளவன்.காட்டுமன்னார்குடி எம். எல் ஏ சிந்தனை செல்வன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 

No comments:

Post a Comment

*/