வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நெய்வேலி கங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது புவனகிரி வட்டாட்சியர் தனபதி தலைமையில் நடைபெற்ற பேரணியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா, கங்கைகொண்டான் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ,பள்ளி மாணவர்கள், வருவாய் துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர்.
கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி மந்தார குப்பத்தில் உள்ள முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது, பேரணியின் போது பொதுமக்களுக்கு மற்றும் வணிகர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வு நெய்வேலி மந்தாரகுப்பம் காவல் ஆய்வாளர் சந்திரன் கங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், முதல் நிலை எழுத்தர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment