பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் G.ஆனந்தன் MC அவர்கள் தலைமையில் பரங்கிப்பேட்டையில் உள்ள வணிகர்கள் அனைவருக்கும் உறுப்பினர் பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பினராக மண்டல தலைவர் D.சண்முகம் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் வீரப்பன்.கௌரவ தலைவர் முஹம்மது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டு வணிகர்கள் அனைவருக்கும் உறுப்பினர் பதிவு சான்றிதழை வழங்கினார் இதில் சங்க நிர்வாகிகள் பொதுச்செயலாளர் சாலிஹ் மரைக்காயர்.பொருளாளர் M.A.அஷ்ரப் அலி.மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ். இணைச்செயலாளர் கவிமதி.திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் மற்றும் 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment