கடலூர் மாவட்டம் வடலூர் நகரப் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதி அடைந்து வருகின்றனர், கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் வடலூர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
நகர பகுதிகளில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் இந்த மின்வெட்டினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், வடலூர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகத்திற்கு செயல்பட்டு வரும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளை உள்ளடக்கிய பகுதிகளில் இது போன்ற சம்பவம் கடந்த சில நாட்களாக தொடர்கதையாகி வருவதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் எனவே மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி முன்னறிவிப்பின்றி மின் தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment