சேத்தியாத்தோப்பு அருகே வாய்க்கால் பாலத்தில் சுவர் அமைக்கும் பணி நடந்து வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 March 2024

சேத்தியாத்தோப்பு அருகே வாய்க்கால் பாலத்தில் சுவர் அமைக்கும் பணி நடந்து வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பின்னலூர் செல்லும் சாலையில் நிறைய வாய்க்கால் சிறு பாலங்கள் இருந்து வருகின்றன.  இந்த சிறு பாவங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் இதனை பல்வேறு வாகனங்கள் கடக்கும்போது  வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் உடனடியாக சிறுபாலங்களின் மீது விபத்து தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான வாய்க்கால் பாலங்களின் மீது விபத்து தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


இதனைப் பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு விபத்து தடுப்புச் அவர்கள் அமைப்பது துவங்கி உள்ளது என்றாலும் இது ஒரு சிறப்பான பணிஎன்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

*/