ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் செயல்பட்ட விதத்தை வேலூர் மக்கள் இன்னும் மறக்கவில்லை அப்படி ஒரு அதிரடி அரசியலை செய்தவர் இவரது அதிமுக அரசியலில் மறக்க முடியாத பாடத்தை சென்னை உயர்நீதிமன்றம் கற்றுக் கொடுத்தது நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவகாரத்தில்தான் அப்போது இவர் செயல்பட்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனை படைத்தார் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர் அவரது உருவபொம்மையையும் எரித்தனர் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இப்படி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தற்போது சிதம்பரத்தில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment