கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 259 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு லாரிகளில் 310 கண்ட்ரோல் யூனிட், 336 விவி பேக்ட் மற்றும் 310 பேலட் ஆகியவை கொண்டுவரப்பட்டு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்ட தனி அறையில் வைக்கப்பட்டு சில் வைக்கப்பட்டது.
மேலும் இந்த வாக்குப்பதிவேந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment