அதிகாலையில் அனைத்து காவடிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காப்பு கட்டப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.காலை 7 மணி அளவில் சின்ன காரைக்காடு சின்ன வாத்தியார் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் ர்கள் காவடிகள் பெண்கள் பால்குடம் எடுத்து சுப்ரமணியர் கோயில் தெரு, மேற்கு தெரு, வள்ளிக்காரைக்காடு வழியாக, யாதவர் தெரு , கிழக்குத் தெரு வழியாக 11:30 மணி அளவில் சிவசுப்பிரமணியர் கோவிலில் காவடிகள் மற்றும் ,பால்குடம் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மகேந்திரன் வாழ்த்திய குழு மேளதாளத்துடன், வண்டிபாளையம் கரையேறவிட்ட குப்பம் அப்பர் கைலாய வாத்திய குழுவினர் இசை வாசிக்க காவடிகள் ஆட்டம் நடைபெற்றது. சின்னக் காரைக்காடு ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சிவசுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..நிகழ்ச்சி ஏற்பாடுகளை சின்ன காரைக்காடு சின்ன வாத்தியார் குடும்பத்தினர் செய்தனர்.
No comments:
Post a Comment