இதனை அறிந்த கண்ணில் பார்வை குறைபாடு உள்ள 250 பயனாளிகள் நேற்றைய பொழுது (17/03/24) முகாமுக்கு வந்தடைந்தனர். வருகை தந்தவர்களை மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.அவர்களில் குறைவான அளவு குறைபாடு உள்ளவர்களுக்கு முகாமிலேயே மருத்துவர்களால் அதற்கான மருந்துகள் ஆலோசனைகள், பரிந்துரைகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கண் பார்வை சம்பந்தமாகபாதிப்பு கூடுதலாக உள்ளவர்களில் 67 பேர் கண்டறியப்பட்டு அவர்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காகபாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் எஸ்டி சீயோன் பள்ளியின் நிர்வாகிபிரவீண்சாமுவேல், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் அரிமா. சௌந்தர்ராஜன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment