தமிழகத்தில் நடைபெற உள்ள 2024 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் அரசியல் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அரசியல் தலைவர்களின் சிலைகள் வெண்மை நிறத் துணியால் மறைக்கப்பட்டும் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றன. தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் அதிகாரிகள் தலைமையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment