சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனைத்து குலாலர் இயக்கம் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 March 2024

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனைத்து குலாலர் இயக்கம் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் கோவில் சம்பந்தமாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். 

அந்த கோரிக்கையில் இளமையாக்கினார் கோவில்மொட்டைக் கோபுரத்தை புணரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும், இளமையாக்கினார் குளத்தின் கிழக்கு ப்பகுதி சுற்றுச்சுவர்  கட்டித் தர வேண்டும், இளமையாக்கினார் கோயிலில் காணாமல் போன திருநீலகண்டர் ரத்தின சேலைகற்சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து குலாலர்  மக்கள் இயக்கம் (மற்றும்) தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கம் சார்பில் ஒரு வருட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி  வந்த நிலையில் நேற்று 8/03/2024 வெள்ளிக்கிழமை கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கடிதம் அனுப்பி இருந்தார்கள்.  


கடிதத்தை ஏற்று இன்று திரளாக கூத்தப்பாக்கம் வேல்முருகன், கடலூர் மாறன், எஸ்.என். சாவடி சுரேஷ், சங்கர், சுப்பிரமணியன், கருணாகரன்,  வண்டிப் பாளையம் மணவெளி குமுதலட்சுமி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் அரசு வேலை காரணமாக இணை ஆணையர் அவர்கள் வருகை தராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கா விட்டால்  சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் முன்பு உண்ணாவிரதம் இருப்பதாக  தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே. ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

*/