கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராம மக்களின் பல்வேறு பயன்பாட்டுக்கு உதவிடும் வகையில் காத்திருப்போர் கூடம் கட்டும் பணி புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுப்பட்டு வந்தது. பணிகள் சிறப்பாக முடிவுற்றபின் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
அதிமுக கிளைக் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன், கீரப்பாளையம்மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. கருப்பன் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று புதிய காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக கிராமத்தின் முகப்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment