கடலூர் மாவட்டம் தலைநகரம் கடலூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுகிறது மேலும் ஆட்டோக்கள் புற்றீசல் போல் அதிகளவில் காணப்படுகிறது குறிப்பாக அபே ஷேர் ஆட்டோக்கள் வரைமுறைகள் இல்லாமல் காணப்படுகிறது இதில் பல ஓட்டுநர்கள் போதையில் ஆட்டோவை இயக்குகின்றனர் மேலும் அதிக சத்தமாக பாடல்களை ஒலித்துக்கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்வது சிக்னல் மற்றும் கூட்டம் நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் சத்தமாக ஒலி எழுப்பி கொண்டு செல்கின்றனர்.
யாராவது இதுபற்றி கேட்டால் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பது அவர்கள் மீது மோதுவது போல் சென்று அச்சுறுத்தல் செய்வது போன்ற செயல்கள் வாடிக்கையாக உள்ளது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்ப்படுகிறது போக்குவரத்து காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது
No comments:
Post a Comment