வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 March 2024

வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் நெய்சர் பேருந்து நிறுத்தம் அருகே  பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணி ஆலயம் உள்ளது, இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி உத்தர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவை தொடர்ந்து தின சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு ஒவ்வொரு வாகனத்திலும் கோவிலில் சுற்றியுள்ள தீய விதிகளின் வழியாக சாமி வீதி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  வடலூர் சேராக்குப்பம் செல்லியம்மன் ஆலயத்தில் இருந்து 100 மேற்பட்ட காவடி மற்றும் 300 மேற்பட்ட பால்குடம் சுமந்தவாறு பக்தர்கள் நெய்சர் அருகே உள்ள சிவசுப்பிரமணியம் ஆலயத்திற்கு வடலூர் நான்கு முனை சந்திப்பு வழியாக அரோகரா அரோகரா கோஷத்துடன்  பாதயாத்திரையாக வந்தனர் பின்னர் சன்னதியில் உள்ள சிவசுப்பிரமணிய ருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டது


இந்நிகழ்வில் வடலூர் பகுதியை சேர்ந்த சுமார் 300க்கு மேற்பட்டோர் காவடிகள், பால்குடங்கள்  எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

No comments:

Post a Comment

*/