கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கப் பயன்படும் விழல் கோரைகள் விளைந்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தன. இந்த கோரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்பட்டு அதற்கான பணம் வசூலிக்கப்படும். இவ்வாறான நிலையில் இந்தாண்டு 150 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த விழல் கோரைகள் திடீரென மர்மமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சரியாக அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில் இது போன்று தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு வேதனையுற்ற கிராம மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்கள்.ஆனால் அவர்கள் வந்தும், அவர்களாலும் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெயில் காலமாதலால் விழல் கோரைகள் நன்றாகக் காய்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் தீப்பற்றியவுடன் சில மணி நேரத்திலேயே காற்றின் உதவியுடன்ஏரியில் இருந்த கோரைகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதனால் சில லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோரைகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த காரணம் என்னவென்று அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment