நாடாளுமன்ற தேர்தலை வருவதை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் 1014 வாக்குச்சாவடி அலுவலர்களில் 973கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் பயிற்சியின் போது காலை 10 மணி முதல் 1.00 மணி வரையிலும் 2.00 மணி முதல் 5:00 மணி வரையிலும் இருக்கட்டுமாக பயிற்சி வழங்கப்பட்டது, இதில் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அசோகன் அஞ்சல் வாக்கு வட்டாட்சியர் இளஞ்சூரியன், சிவசக்தி வேல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர், துரைராஜன், மண்டல துணை வட்டாட்சியர், தனலட்சுமி தேர்தல் துணை வட்டாட்சியர் ,குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment