கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்காக அரசு பேருந்து பயணிகளோடு வந்தது. அந்தப் பேருந்து சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் வளைவில் திரும்பும் போது திடீரென பேருந்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு சாலைக்கும் எதிரில் இருந்த கடைகளுக்கும் நடுவே நின்று போனது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும் நீண்ட நேரமாக பேருந்து முன் பக்கம் செல்ல முடியாமல் பின்பக்கமும் போக முடியாமல் அப்படியே நின்றது.
இதன் பின்னர் அங்கிருந்தவர்கள் சாலையில் இருந்து பேருந்தை அப்புறப்படுத்தபொதுமக்கள் உதவியோடு பேருந்தின் முன்பக்கமிருந்து நீண்ட நேரம் தள்ளிப் பார்த்தனர்.ஆனாலும் பேருந்து நகர்வதாக இல்லை. இதனையடுத்து அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்றிலிருந்து ரோப் கயிறு எடுத்து பேருந்தின் பின்பக்கம் கட்டி இழுக்கப்பட்டது. பின்னர் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து ஓரமாக தள்ளிக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்களும் பேருந்து பயணிகளும் தெரிவிக்கும் போது பனிமனையிலிருந்து பயணிகளை ஏற்றுவதற்கு பேருந்துகளை வெளியே கொண்டு வரும்போதே எல்லா பாகங்களும் சரியான முறையில் இயக்கத்தில் உள்ளதா என்பதை பரிசோதித்து எடுத்து வர வேண்டும் என்றும் இப்படி திடீரென்று நடு ரோட்டில் பழுதாகிநிற்கும்போது எதிரே வேறு கனரக வாகனம் வந்தால் பயணிகளின் நிலை என்னவாவது? என்ற தங்களின் பயத்தையும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment