கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மாணவர்களுக்கான மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சேத்தியாத்தோப்பு பூதங்குடியில் உள்ள எஸ் டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடித்தனர. அதன்படி மாணவர்கள் அகிலேஷ், பவித்ரன். ஸ்ரீ கணேஷ் பிரபு, ஆர்யா, கார்த்திகா, லித்திகா, ஹரிணி, ஆகியோர் சாய் மற்றும் கட்டா பிரிவுகளில் முதலிடமும், தனுஷ், ஸ்ரீகாந்த், செல்வா, பரத்வாஜ், கீர்த்தி வாசன், கவுசிகா, திவ்யபாரதி, கனிஷ்காஆகிய மாணவர்கள் சாய் மற்றும் கட்டா பிரிவுகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.
மேலும் இப்பள்ளி மாணவர்கள் அகிலேஷ், ஸ்ரீகாந்த, கணேஷ் பிரபு ஆகியோர் பிளாக் பெல்ட் பட்டமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாக இயக்குனர் சாமுவேல் சுஜின், குழந்தைகள் நல மருத்துவர் தீபாசுஜினும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் வி. ரங்கநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ், பள்ளியின் ஆசிரியை அன்பு ராணி ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்ள விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து இனிதே முடிவு பெற்றது.
No comments:
Post a Comment