வடலூர் தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா ஊழல் செய்துள்ள ஒன்றிய அரசையும் தேர்தல் பத்திர கணக்குகளை கொடுக்க 136 நாட்கள் தவணை கேட்கும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து வடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள எஸ் பி ஐ வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி கடலூர் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் நகர செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது, இதில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு நகரத் தலைவர் சி என். ராமலிங்கம், வடலூர் நகர வர்த்தக பிரிவு தலைவர் கருங்குழி கணேசன், வடலூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வேல்முருகன், ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி,.
No comments:
Post a Comment