ஆண்டு விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது, மேலும் மாணவர்கள் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலையான கராத்தே ஆகியவற்றை விழாவிற்கு வந்திருந்த பெற்றோர் மத்தியில் செய்து காட்டினார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், மற்றும் உணவு வகைகளால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குழு நடனம் மூலம் எடுத்துரைத்தனர்.
இறுதியில் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் பெற்றோர் பலர் கலந்துகொண்டு தங்களது பிள்ளைகளின் நடன நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரசன்னா பள்ளி செயலாளர் சரஸ்வதி ராமச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment