முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பரங்கிப்பேட்டை அரசு துவக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 March 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பரங்கிப்பேட்டை அரசு துவக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பு.மானம்பாடி பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் வார்டு கவுன்சிலர் G.ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டில் முதலமைச்சரை வாழ்த்து வகையில் பள்ளியில் கேக் வெட்டியும் கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் K.கலைச்செல்வி. ஆசிரியர் பக்ருன்னிஷா முன்னிலை வைத்தனர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பினராக திமுக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர்.திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள். திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ஜாபர் ஷெரீஃப். பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள். பொதுச் செயலாளர் சாலிஹ் மரைக்காயர். துணைச் செயலாளர் கவிமதி.மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ். திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ. மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.


திமுக IT WING விஜய் சிம்மன் .18 வது வார்டு துணைச் செயலாளர் மீனா .ஊர் பிரமுகர்கள் கண்ணன். ராமு. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


- செய்தியாளர் சாதிக் அலி 

No comments:

Post a Comment

*/