அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 March 2024

அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலைய வளாகத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

மாவட்ட குழு செல்வம் ரமேஷ்  குளோத்துங்கன்  அறிவழகன் மாதர் சங்கம் மாவட்ட குழு தலைவி செல்வி மற்றும்  பாரி வட்டக் குழு தோழர்கள் அறிவழகன் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பூராசாமி மாவட்ட குழு  பொட்டு ராமானுஜம் மற்றும் மாநில செயலாளர் எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் மாதவன் ஆகியோர்.  கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்கள்.


அப்பொழுது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் அமைதியாக போராடிவரும் விவசாயிகளை குறி வைத்து காவல்துறை ஏவி விட்டு கடுமையாக தாக்கியதில் ஒரு இளம் விவசாயி கொல்லப்பட்டுள்ளார் பல விவசாயிகள் தாக்கப்பட்டுள்ளார்கள் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அடித்து சேதப்படுத்தி உள்ளார்கள் தாக்குதலை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குடிமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசு 5 சென்ட் மனை வழங்கி அதில் 5 லட்சம் ரூபாயில் வீடு கட்டி தர வேண்டும் எனவும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்க்கையை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் பகுதியில் மணல் குவாரியை திறக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு நிலம் அற்ற எஸ்சி எஸ்டி மக்களுக்கு அரசு வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள்.


மேலும் ஆர்ப்பாட்டத்தில்  ராஜமாணிக்கம் முருகேசன் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ப தனசேகரன் காட்டுமன்னார்கோயில் வட்ட செயலாளர் வெங்கடேசன் வட்டக் குழுத் தோழர்கள் குமார் இளங்கோவன் மாதர் சங்கம் சார்பில் தர்மம்மாள்  ஷோபா பாணுமதி காத்தாயி சரோஜா ஜோதிஸ்வரி சாந்தி உள்ளிட்ட ஏராளமான. நோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள் முன்னதாக மாநில செயலாளர் எம் ஜி ராமச்சந்திரன் தலைமையில் அனைவரும் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment

*/