கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீழவன்னியத்தெருவில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, சங்கல்ப ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாபூர்ணாகுதி உள்ளிட்ட பல பூஜைகள் பகலில் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து கோவிலில் இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
1008 மந்திரங்கள் முழங்க தொடங்கிய விளக்குப் பூஜையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நீண்ட ஆயுள், தாலி பாக்கியம்,அனைத்து கஷ்டங்கள் தீரவும், உலக அமைதி வேண்டியும் இந்த விளக்கு பூஜை நடைபெற்றது. முடிவில் மூலவர் காளியம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு விளக்கு பூஜையில் பங்கேற்றவர்கள், பொதுமக்கள் என பலருக்கும் கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment