இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருடன் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தினர் சந்திப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 March 2024

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருடன் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தினர் சந்திப்பு.


கடலூரில் உள்ள மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இணை ஆணையர் பரணிதரன்  தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தினரையும் மற்றும் இளமையாக்கினார் கோயிலின் நிர்வாகியையும்  நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஏற்கனவே தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தினர் மற்றும் இளமையாக்கினார் கோயிலின் நிர்வாகிகளும் வைத்த கோரிக்கையின்படி சிதம்பரம் இளமையாக்கினார் ராஜ கோபுரத்தை  புனரமைத்துத் தருவதாகவும் ஒரு வருடத்திற்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும் எனவும், குளத்தின் கிழக்குப்பகுதி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும், காணாமல் போன திருநீலகண்டர்  ரத்தின சேலை கற்சிலைகளை விரைவில் கண்டுபிடித்துத் தருவதாகவும்  கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தங்களிடம் தெரிவித்ததாக தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ கே ராஜா  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே. ராஜா, எஸ்.என்.சாவடி சுரேஷ், சங்கர், குமாரபுரம் சுப்பிரமணி, மனவெளி குமுதலஷ்மி ஆகியோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/