கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள கம்மாபுரம் ஒன்றிய இருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட ஆர் சி கோவிலாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற மிகவும் பழமையான புனித சவேரியார் ஆலயம் உள்ளது, இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் புனித சவேரியாரின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இந்தாண்டு தேர் திருவிழா கடந்த 3 .03. 2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீரா ரெட்டி குப்பம் பங்குத்தந்தை ஜான் சீரில் தலைமையில் நடைபெற்ற ஆடம்பர தேர் பவணியில் மாதா சுருபம் மற்றும் புனித சவேரியார் சுருபம் கொண்ட இரண்டு தேர்கள் கோவில் வளாகத்தில் இருந்து கிளம்பி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது வீடுகளில் உள்ள மக்கள் தேர்களில் உள்ள சுருபங்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு புனித சவேரியாரின் பாடல்களை பாடியவாறு தேருடன் பவனி வந்தனர்.
No comments:
Post a Comment