குறிஞ்சிப்பாடியில் புதிய பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 March 2024

குறிஞ்சிப்பாடியில் புதிய பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 410.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய 9 வகுப்பறைகள் அறிவியல் ஆய்வகம்  கழிவறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்


தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் கே.கே நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையை வேளாண்மை மற்றும் திறந்து வைத்தார் அவர் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி 15 வது நிதி குழு திட்டம் 2022 - 2023 கீழ் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டிற்காக குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகர், புவனகிரி, கிள்ளை, மற்றும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகளுக்கு புது சுகாதார வாகனங்களை குடியசைத்து தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, ராமச்சந்திரன் திமுக ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார்,  துணைத் தலைவர் ராமர், வடலூர் நகர மன்ற தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி திமுக நகர செயலாளர் ஜெய்சங்கர், வடலூர் திமுக நகர செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/