கடலூரில் எம்ஜிஆர் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகள்; எதிர்ப்பு தெரிவித்து குவிந்த அதிமுகவினர் பரபரப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

கடலூரில் எம்ஜிஆர் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகள்; எதிர்ப்பு தெரிவித்து குவிந்த அதிமுகவினர் பரபரப்பு.


கடலூர் மாநகராட்சி புதுப்பாளையம் பகுதியில் எம்.ஜி.ஆர் சிலை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து அந்த சிலை சேதம் அடைந்ததால் அதனை புதுப்பித்து வர்ணம் தீட்டி  மீண்டும் தேர்வு அந்த இடத்தில் எம்ஜிஆர் சிலையை அதிமுகவினர் சீரமைத்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் பழைய சிலை அகற்றிவிட்டு புதிய சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி சிலையை அகற்ற வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்து அங்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன், புதுப்பாளையம் பகுதி செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் தலைமையில்  அதிமுகவினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பழைய சிலை அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை அதிமுகவினர், மாநகராட்சி அதிகாரிகளிடம்  சமர்ப்பித்த நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஏ ஆர் சி நாகராஜ், மணிமாறன், செந்தில், அழகப்பன் எத்திராஜ்,துரை, அருன் இளையராஜா மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டனர் 

No comments:

Post a Comment

*/