சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெய்வேலி நுகர்வோர் அமைப்பு ஓட்டுநர் பயிற்சி பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெய்வேலி நுகர்வோர் அமைப்பு ஓட்டுநர் பயிற்சி பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெய்வேலி நுகர்வோர் அமைப்பு ஓட்டுநர் பயிற்சி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரான்சிஸ் மற்றும் மந்தாரக்குப்பம் உதவி காவல் ஆய்வாளர் சேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், பின்னர் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.

ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது, மேலும் விபத்துகளை தடுக்கும் விதமாக மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களின் கருப்பு வெள்ளை ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, பின்னர் பேருந்து வளாகத்தில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் நெய்வேலி நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் தங்கம் ஆனந்தன் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.                       


- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி. 

No comments:

Post a Comment

*/