பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், கைபேசி பயன்படுத்துவதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், ஓ.டீ.பி தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான ஆப் களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், முக்கியமாக படித்த இளைஞர்களை குறிவைக்கும் பகுதி நேர வேலை பொய்யான தகவல் ஆகியவை குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சேவியர், கல்லூரி ஆசிரியர்கள் சந்தான ராஜ்,ஷீலா பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.


No comments:
Post a Comment