கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, அதிமுக வடலூர் நகர செயலாளர் சி எஸ் பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் முன்னிலை விகித்தார்.
கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் போராட்டத்தின் போது அவர் பேசுகையில் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா தலைவனுக்கும், திமுகவின் முதல்வரும், அவரது குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருட்களால், அமைச்சர் உள்ளிட்டோர்களை கண்டித்தும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையை கண்டித்தும், கையில் பதாதைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment