கடலூர் மாவட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பரங்கிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிட அடிக்கல் நாட்டுதல் மற்றும் சிறுபான்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை இன்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் அவர்களும் இணைந்து சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தும் சிறுபான்மைத்துறை சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்கள்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அ.அருண் தம்புராஜ்.சார் ஆசிரியர் ராகேஷ்ராணி.திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள். பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர்.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள். பரங்கிப்பேட்டை தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள்.திமுக மாவட்ட. ஒன்றிய. நகர நிர்வாகிகள். இளைஞர் அணி நிர்வாகிகள்.திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment