ஒரு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு அணிவகுத்து நின்ற அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி, திமுக அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதில் புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சி.என்.சிவப்பிரகாசம், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், ஆகியோர் முன்னிலை வகிக்க, முன்னாள் நகர செயலாளர் நன்மாறன் வரவேற்க, மாவட்ட பிரதிநிதி ராஜகுரு, நகர அவைத் தலைவர் கோழி கோவிந்தசாமி, பொருளாளர் ராமலிங்கம்,, பேரூராட்சி கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன்,வார்டு செயலாளர்கள்குணசேகரன், மதியழகன், ஸ்ரீதர், சர்புதீன், வீரமணி, பாலசுந்தரம், லலிதா, அண்ணா பிரபாகரன், ஜபருல்லா, முருகேசன், மகேந்திரன், புவனகிரி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஜெயசீலன், பிருத்திவி, சாமிநாதன், வளையமாதேவி செல்வராசு, கத்தாழை செல்வராசு, லட்சுமி நாராயணன், இந்திரா, மோகன், ராஜ்குமார், செல்வகுமார் ஆகியோரும், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அரங்கப்பன், கமலக்கண்ணன், செந்தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் செல்விஉள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நகர துணைச் செயலாளர் சம்பத் நன்றிகூறினார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிய தமிழகஅரசைக் கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமாகிய அருண்மொழிதேவன் அறிவுறுத்தலின் பேரில் சேத்தியாத் தோப்புநகர கழகச் செயலாளர் எஸ். ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment