புவனகிரிப் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் பெட்டிக்கடை மூடி சீல்வைக்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 March 2024

புவனகிரிப் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் பெட்டிக்கடை மூடி சீல்வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாரம் ஏ.மண்டபம் பகுதியில் 26.3.2024 செவ்வாய்க்கிழமை இன்று ஜோதிலட்சுமி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் பெயர் லட்சுமணன். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை ஆய்வின் மூலம் கண்டறிந்து உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையை மூடி சீல் வைத்தனர். அத்துடன் உடலுக்குத் தீங்கு தரும் இத்தகைய புகையிலைப் பொருட்களை இனிமேல் கடையில் வைத்து விற்பனைசெய்ய வேண்டாம் என்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போதுகிள்ளை காவல் நிலைய காவலர் ஆனந்தபாபு உடனிருந்தார்.  

No comments:

Post a Comment

*/